லீலா மணியம்மா என்கிற 80 வயது மூதாட்டி மோகன்லாலின் தீவிர ரசிகை. மோகன்லாலின் த்ரிஷ்யம் 3 படப்பிடிப்பு நடைபெறுவதை கேள்விப்பட்டு தனது பேரனை அழைத்துக் கொண்டு படப்பிடிப்பு தளத்திற்கு வந்தவர், உள்ளே செல்ல முடியாமல் வெகு நேரம் காத்துக் கிடந்தார். படக்குழுவினரிடம் மோகன்லாலை சந்தித்து விட்டு தான், நான் இங்கிருந்து கிளம்புவேன் என்று சொல்லி இருக்கிறார். ஆனாலும் படப்பிடிப்பு பிசியில் உரிய நேரத்தில் அந்த தகவல் அவருக்கு சொல்லப்படவில்லை. பின்னர் இந்த தகவலை கேள்விப்பட்ட மோகன்லால், மாலை 5 மணி அளவில் உடனடியாக அந்த மூதாட்டியை அழித்து வர செய்து நலம் விசாரித்து அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.


