கீர்த்தி சுரேஷ் தற்போது நடித்துள்ள ‘ரிவால்வர் ரீட்டா’ படம் வரும் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதில் கீர்த்தி சுரேஷுடன் ராதிகா சரத்குமார், ரெடின் கிங்ஸ்லி, சுனில், ஜான் விஜய் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஜே.கே. சந்துரு இயக்கிய இந்த படத்திற்குப் பிறகு ‘கன்னிவெடி’, ‘ரவுடி ஜனார்த்தன்’ போன்ற படங்களிலும் அவர் நடித்துள்ள படங்கள் வெளியாக உள்ளன.
‘ரிவால்வர் ரீட்டா’ படத்தின் புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ், சமீபத்திய பேட்டி ஒன்றில், எனக்கு முன்பு உடல் எடை அதிகரித்ததற்குக் காரணம் உணவில் கட்டுப்பாடு இல்லாததே. கடந்த ஒரு வருடமாக தீவிர உணவு கட்டுப்பாட்டை கடைபிடித்ததன் விளைவாக தற்போது 10 கிலோ எடை குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும், அதற்காக யோகா பயிற்சியை தொடர்ந்து செய்து வருவதால் உடல், மனம் இரண்டும் ஆரோக்கியமாக உள்ளதாகவும் கீர்த்தி சுரேஷ் பகிர்ந்துள்ளார்.

