ஹிந்தியில் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘ராஞ்சனா’ படத்தில் காதல் தோல்வியடைந்த நாயகனாக அவரின் நடிப்பு பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் பின்னரும் சில ஹிந்தி படங்களில் நடித்திருந்த அவர், தற்போது மீண்டும் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் ‘தேரே இஷ்க் மெயின்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படம் நவம்பர் 28ஆம் தேதி வெளியாவதுடன், கிரித்தி சனோன் நாயகியாக நடித்துள்ளார். இதில் கூட தனுஷ் காதல் தோல்வியடைந்த மனிதராகவே தோன்றுகிறார்.

படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் இதுகுறித்து தனுஷிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, நான் ஏன் எப்போதும் எனக்கு காதல் தோல்வியடைந்த கேரக்டர்களையே கொடுக்கிறீர்கள் என ஆனந்த் எல் ராய் இயக்குனரிடம் கேட்டேன் என்று அவர் கூறினார். அதற்கு இயக்குனர், உங்களைப் பார்க்கும் போதே மிகப் பெரிய காதல் தோல்வி கொண்ட மனிதனின் முகத்தோற்றம் இருக்கிறது என்று சொல்லியதாக தனுஷ் நகைச்சுவையாக பகிர்ந்தார்.
அதை கேட்ட பிறகு கண்ணாடியில் தன் முகத்தை பார்த்து ‘என்னதான் எனது முகத்தில் தெரிகிறது?’ என்று தான் கூட ஆச்சரியப்பட்டதாகவும் தெரிவித்தார். இயக்குனரின் கருத்தை அவ்வளவு நேர்மறையாகவும், பாராட்டாகவும் தான் எடுத்துக் கொள்வதாக அவர் கூறினார்.

