‘சார்’ படத்துக்கு பிறகு விமல் நடித்துள்ள புதிய படம் ‘மகாசேனா’. தினேஷ் கலைச்செல்வன் இயக்கிய இந்த படத்தில், விமலுடன் சிருஷ்டி டாங்கே, யோகி பாபு, ஜான் விஜய் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

மருதம் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படம் வரும் டிசம்பர் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது. மேலும், ‘மகாசேனா’ படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சமூக அநீதிகளைக் கண்டிக்கும் கருப்பொருளை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படம், ‘கும்கி’, ‘கும்கி 2’ படங்களின் வரிசையில், யானைகளை பின்னணியாக கொண்ட கதையாக உருவாகியுள்ளது.

