Touring Talkies
100% Cinema

Friday, November 21, 2025

Touring Talkies

காதல் படங்கள் என்றும் மக்களை கவரும் என சமீபத்திய படங்கள் நிரூபித்துள்ளன – நடிகர் நாக சைதன்யா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை ஆனந்தி, பிரேமண்டே என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் மூலம் நவநீத ஸ்ரீராம் இயக்குநராக அறிமுகமாகிறார். இதில் தெலுங்கு நடிகர் பிரியதர்ஷி புலிகொண்டா கதாநாயகனாக நடித்துள்ளார்.

காதல் மற்றும் நகைச்சுவை வகையில் உருவான இந்த படத்தை ஜான்வி நரங்க் மற்றும் புஸ்கூர் ராம் மோகன் ராவ் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வில் நடிகர் நாக சைதன்யா மற்றும் இயக்குநர் சேகர் கம்முலா சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அப்போது பேசிய நாக சைதன்யா, காதல் படங்கள் தனக்கு மிகவும் பிடிக்கும். கோவிட் பிறகு, மற்றுபடி யதார்த்தமான மற்றும் புதுமையான ஆக்ஷன் படங்களே பார்வையாளர்களை கவரும் என்று அனைவரும் நினைத்தனர். ஆனால் சமீபத்திய படங்களின் வெற்றி, காதல் படங்களும் என்றும் மக்களை கவரும் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. காதல் படங்கள் காலத்தால் அழியாதவை என்றார்.

- Advertisement -

Read more

Local News