டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், தற்போது கதாநாயகனாக புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நடிக்கிறார். இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தில் அபிஷன் ஜீவிந்தின் உதவி இயக்குனராக பணியாற்றிய மதன், இந்த புதிய திரைப்படத்தை இயக்குகிறார். இதற்கிடையில், அபிஷன் ஜீவிந்த் பகிர்ந்துள்ள புதிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. இந்த படத்தை எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் மற்றும் சவுந்தர்யா ரஜினிகாந்த் இணைந்து தயாரித்துள்ளனர்.
மேலும், டூரிஸ்ட் பேமிலி படத்தின் இயக்குனராக இருந்து இப்போது கதாநாயகனாக அறிமுகமாகும் அபிஷன் ஜீவிந்தின் புதிய படத்தின் டைட்டில் டீசர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று தயாரிப்பாளர் சவுந்தர்யா ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். இந்த டைட்டில் டீசரை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட உள்ளார்.

