தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அருண் விஜய். இவர் தற்போது கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் ‘ரெட்ட தல’ என்ற படத்தில் நடித்துள்ளார். அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தில் நடிகை தான்யா ரவிச்சந்திரன், சித்தி இத்னானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் தயாரிக்க சாம்.சி.எஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் அருண் விஜய் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்திருப்பதாகவும், ‘ரெட்ட தல’ படம் அடுத்தடுத்த சுவாரஸ்யமான திருப்பங்களுடன் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இப்படம் வரும் டிசம்பர் 18ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், நடிகர் அருண் விஜய் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ரெட்ட தல படக்குழு, இப்படத்தின் ஸ்பெஷல் கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

