Touring Talkies
100% Cinema

Thursday, November 20, 2025

Touring Talkies

வுண்டர் பார் பிலிம்ஸ்‌ என்ற பெயரில் குறிப்பிட்ட எண்களில் இருந்து வரும் அழைப்புகள் அனைத்தும் போலியானவை – நடிகர் தனுஷின் மேனஜர் ஸ்ரேயஸ் விளக்கம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் தனுஷின் மேனேஜர் சொல்லிக்கொண்டு ஒரு மர்மநபர் போனில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றால் சில விஷயங்களுக்கு ஒப்புக்கொள்ள வேண்டும் என்று பேசியதாக சின்னத்திரை நடிகை மான்யா ஆனந்த் சமீபத்திய பேட்டி ஒன்றில் குற்றச்சாட்டியிருந்தார்.

பின்னர் தான் கொடுத்த பேட்டி வீடியோவை சிலர் தவறாக எடிட் செய்யப்பட்டு தவறான தகவலை வெளியிட்டிருப்பதாக கூறி வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்திருந்தார்.

இந்த நிலையில் தனுஷின் மேனேஜர் ஸ்ரேயஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்தாண்டு ஜனவரி 31ம் தேதி மற்றும் இந்தாண்டு பிப்ரவரி 19 ஆகிய தேதிகளில் எனது சோசியல் மீடியாவில் ‘வுண்டர் பார் பிலிம்ஸ்’ என்ற எங்கள் நிறுவனத்தின் பெயரில் மோசடி நடப்பதாக தெரிவித்திருந்தேன். 75987 46841 மற்றும் 75987 56841 ஆகிய எண்களில் இருந்து வரும் கால், மெசேஜ் அனைத்தும் போலியானவை. இந்த எண்களில் இருந்து எனது புகைப்படத்தை பயன்படுத்தி யாரேனும் சினிமா வாய்ப்பு தருவதாக சொன்னால் நம்ப வேண்டாம். இதுகுறித்து வழக்கு பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News