நடிகர் பிரித்விராஜ் 2013ல் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடித்த ‘மெமரிஸ்’ திரைப்படத்துக்கு இரண்டாம் பாகம் வந்தால் நன்றாக இருக்கும் என விருப்பம் தெரிவித்தார். நாளை (நவம்பர் 21) வெளிவரவுள்ள ‘விலாயுத் புத்தா’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, “உங்களுடைய எந்த படத்தின் இரண்டாம் பாகத்தை நீங்கள் பார்க்க விரும்புகிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த பிரித்விராஜ், “இப்படி ஒரு முடிவை எடுத்தால்தான் அது சரியாக இருக்கும்; அந்தப் படம் எடுத்தவர்களே பேச வேண்டும். ஆனால் ஜீத்து ஜோசப், ‘மெமரிஸ்’ படத்துக்கு இரண்டாம் பாகம் செய்ய விரும்புவதாக முன்பே சொல்லியுள்ளார். ஒரு நடிகனாக நான் சொல்ல வேண்டுமானால், நானும் ‘மெமரிஸ்’ படத்தையே தேர்வு செய்வேன்.
இதுபற்றி நாங்கள் நேரம் கிடைக்கும் போதெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறோம். இப்போ நான் இதை வெளியில் சொல்லிட்டேன், எனவே அவர் இதை கைவிட மாட்டார் என்று நம்புகிறேன்,” என்று நகைச்சுவையாக தெரிவித்தார் பிரித்விராஜ்.

