சூர்யா நடிப்பில் அடுத்து கருப்பு படம் வெளியாக உள்ளது. இதுதவிர, வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா அவரது 46வது படத்தில் பிசியாக நடித்து வருகிறார். அடுத்து சூர்யாவின் 47வது படத்தை, மலையாளத்தில் வெளியான ஆவேசம் படத்தின் இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கவுள்ளார் என கூறப்படுகிறது.

இந்த புதிய படத்தை, சூர்யா சமீபத்தில் தொடங்கியுள்ள ழகரம் என்ற தயாரிப்புக் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்போகிறார்களென தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த படத்தில் கதாநாயகியாக நஸ்ரியா நடிக்கவுள்ளார். மேலும், முக்கியமான கதாபாத்திரத்தில் நஸ்லினும் இணைந்து நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 8ம் தேதி கேரளாவில் துவங்குகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படத்தின் மூலம் சூர்யா மீண்டும் ஒரு போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் எனவும் சொல்லப்படுகிறது.

