சமீபத்தில் மகேஷ் பாபு நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் வாரணாசி படத்தின் டைட்டில் மற்றும் ஃபஸ்ட் லுக் வெளியீட்டு விழா மிக மிக பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சிக்காக மட்டுமே ரூ. 27 கோடி செலவிடப்பட்டதாக சொல்லபடுகிறது. இந்த நிகழ்ச்சியில் நடிகையும், பாடகியுமான ஸ்ருதிஹாசன் மிகவும் ஃபயரான ஒரு பாடல் நிகழ்ச்சியை கொடுத்திருந்தார். அதற்காக அவருக்கு 1 கோடி ரூபாய் சம்பளமாக தயாரிப்பு நிறுவனம் கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.


