லைகா நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்த ‘லாக் டவுன்’ திரைப்படத்தில் நடிகை அனுபமா பரமேஸ்வரன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குனர் ஏ.ஆர். ஜீவா இயக்கியுள்ள இந்த படத்தில் சார்லி, நிரோஷா, பிரியா வெங்கட், லிவிங்ஸ்டன், இந்துமதி, ராஜ்குமார், ஷாம்ஜி, லொள்ளு சபா மாறன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்துக்கு என்ஆர் ரகுநந்தன் மற்றும் சித்தார்த் விபின் இசையமைத்துள்ளனர். கே.ஏ. சக்திவேல் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் டீசரும் பாடல்களும் சமீபத்தில் வெளியானதும் நல்ல வரவேற்பைப் பெற்றன.
இந்நிலையில், லாக் டவுன் படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் நேரத்தில், தற்போது படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, லாக் டவுன் படம் வரும் டிசம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

