ஜாக்கி சானின் மகன், வாரிசு என்பதற்காக அப்பாவின் சொத்துக்களை பெற விருப்பவில்லை என்று கூறியுள்ளார். ஜாக்கி சான் சமீபத்திய ஒரு பேட்டியில் இதுகுறித்து பேசுகையில், என்னுடைய 3,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முழுவதையும் நான் ஏழைகளுக்காக அறக்கட்டளைக்கு வழங்கி விட்டேன். இதைப் பற்றி என் மகனிடம் ‘உனக்கு எவ்வித வருத்தமும் இல்லையா? என்று கேட்டேன். அதற்கு என் மகன் ‘ஜேசி சான்’ நானும் திறமைசாலிதான், தானாகவே உழைத்து பணம் சம்பாரிக்க விரும்புகிறேன்..! நீங்கள் சம்பாரித்த செல்வத்தை நான் வாரிசு என்பதற்காக கொடுப்பதில் எந்த அர்த்தமும்மில்லை..! பிறர் உதவியின்றி உழைப்பின் மூலம் நானும் முன்னேற ஆசைப்படுகிறேன் என்று கூறிவிட்டான் என்று ஜாக்கி சான் பெருமையாக கூறியுள்ளார்.


