இசையமைப்பாளர் சாய் அபயங்கர், ‘கட்சி சேரா’, ‘ஆச கூட’ போன்ற பாடல்கள் மூலம் புகழ் பெற்றார். இந்த பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றதையடுத்து, திரைப்படங்களில் இசையமைக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. ஷான் நிகாம் நடித்துள்ள ‘பல்டி’ படத்தின் மூலம் சாய் மலையாளத் திரைப்படங்களில் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.

அவரின் இசையமைப்பில் உருவான முதல் படம் ‘டியூட்’ வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் தொடர்ச்சியாக ‘கருப்பு’, ‘மார்ஷல்’, ‘அட்லி இயக்கி வரும் AA22XA6’ உள்ளிட்ட ஆகிய பல படங்களுக்கு இசையமைப்பாளராக சாய் அபயங்கர் ஒப்பந்தமாகி உள்ளார். இதற்கிடையில், அவரது சினிமா என்ட்ரி குறித்து அடிக்கடி விமர்சனங்களை சந்தித்து வருகிறார். இதுகுறித்து பேட்டியொன்றில் அவர் வெளிப்படையாக பேசியுள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது:
சமூக வலைதளங்களில் நான் பல விமர்சனங்களை சந்தித்து வருகிறேன் என்பது எனக்குத் தெரியும். யார் வேண்டுமானாலும் கருத்து தெரிவிக்கலாம், அது அவர்களின் உரிமை. ஆனால் நான் தொடர்ந்து இசையின் மூலம் என்னை நிரூபித்துக் கொண்டே இருப்பேன். என்மீதான விமர்சனங்கள் என்னை மேலும் கடினமாக உழைக்கத் தூண்டுகிறது. ‘பல்டி’ மற்றும் ‘டியூட்’ படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றதில் மிகவும் மகிழ்ச்சி. அடுத்தடுத்த படங்களிலும் என்னை தொடர்ந்து நிரூபித்துக் கொண்டே இருப்பேன் என சாய் அபயங்கர் தெரிவித்துள்ளார்.

