நடிகை தீபிகா படுகோனே, ஷாருக்கான் நடிக்கும் கிங் படத்தில் அவருக்கு ஜோடியாகவும், அதேபோல் அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் புதிய படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.

சமீபத்திய பேட்டியில் தீபிகா படுகோனே பேசுகையில் சில படங்களுக்கு பெரிய அளவில் சம்பளம் வழங்குவதாகக் கூறியும், நான் நடிக்க மறுத்துவிட்டேன் என்பதற்காக சிலர் விமர்சிக்கிறார்கள். ஆனால் என்னே பொருத்தவரை அதிக சம்பளம் மட்டும் முக்கியமில்லை. எனக்கான கதாபாத்திரம் சரியாகவும், வலுவாகவும் இருக்க வேண்டும். கமர்ஷியல் படம் என்றாலும் அந்த ரோல் பெரிய தாக்கம் ஏற்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். அதற்கும் மேலாக அந்த கதையை சொல்லும் இயக்குநர் மீது எனக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். இந்த அனைத்தையும் கருத்தில் கொண்டுதான் நான் ஒரு படத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
பெரிய சம்பளத்திற்காக கண்ணை மூடி எந்த படத்தையும் ஏற்கும் நடிகை நான் அல்ல. சிலர் சமூகம் சார்ந்த மெசேஜ் சொல்லும் படங்களைப் பற்றியும் பேசுகிறார்கள். ஆனால் அவர்கள் சொல்ல நினைக்கும் அந்த மெசேஜ் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளப்படும் வகையிலானதா என்று முதலில் நான் ஆராய்வேன். அதில் எனக்கு நம்பிக்கை ஏற்பட்டால் மட்டுமே அந்த படங்களை ஏற்கிறேன். இல்லையெனில் நிச்சயமாக தவிர்க்கிறேன். இதற்காக என்னை விமர்சிப்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் நான் அதன் மீது எந்த கவலையும் கொள்வதில்லை என தீபிகா படுகோனே தெரிவித்துள்ளார்.

