Touring Talkies
100% Cinema

Tuesday, November 18, 2025

Touring Talkies

என்னைப் பற்றி பரவும் அவதூறு கருத்துகள் எனக்கு வேதனை அளிக்கிறது!- நடிகை கயாடு லோஹர்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான முகில் பேட்டை என்ற கன்னடப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் காயடு லோஹர். அதன் பின்னர் மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்தார். ஆனால் அந்த படங்களில் எதுவும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதற்கிடையில், பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடித்த டிராகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதல் முறையாக அறிமுகமானார். அந்த படம் இவருக்கு பெரும் வரவேற்பை ஏற்படுத்தி, தமிழ் ரசிகர்களின் விருப்பமான நாயகியாக அவரை மாற்றியது.

தற்போது காயடு லோஹர், நடிகர் அதர்வாவுக்கு ஜோடியாக இதயம் முரளி படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஜீ.வி. பிரகாஷூடன் இம்மார்டல் படத்திலும், சிம்பு நடிக்கும் எஸ்.டி.ஆர் 49 படத்திலும் முக்கிய பாத்திரங்களில் நடித்துவருகிறார். அடுத்ததாக, லப்பர் பந்து இயக்குனர் தமிழரசன் இயக்கும் புதிய படத்தில், தனுஷுக்கு ஜோடியாக காயடு லோஹர் நடிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கயாடு லோஹர் சமீபத்திய பேட்டி ஒன்றில், சமூக வலைதளங்களில் மீடியாக்களில் என்னைப் பற்றி பரவும் அவதூறு கருத்துகள் எனக்கு வேதனை அளிக்கிறது. ஒரு கண்ணியமான பின்னணியில் இருந்து வருபவள் நான், பின்னால் பேசுபவர்கள் பற்றி கவலைப்படவில்லை என்றாலும், ஒருகட்டத்தில் மனதிற்குள் வலிக்கும். எந்த தவறும் செய்யாமல் கனவை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள்? என தெரியவில்லை என்றுள்ளார்.

- Advertisement -

Read more

Local News