ஐபொம்மா மற்றும் பப்பம் ஆகிய இணையதளங்களின் வழியாக பல்வேறு மொழி திரைப்படங்களை சட்டவிரோதமாக வெளியிட்டு வந்த முக்கிய சைபர் குற்றவாளி உட்பட ஐந்து பேரை ஐதராபாத் சைபர் கிரைம் பிரிவு கைது செய்துள்ளது. சட்டவிரோதமாக திரைப்படங்களை வெளியாவதை தடுக்க தெலுங்கு திரைப்பட வணிக சங்கம் வழக்குபதிவு செய்ததுடன் விசாரணைத் தொடங்கியது. தொடர்ந்து செப்டம்பர் மாதம் திரைப்படங்களை சட்டவிரோதமாக டெலிகிராம் உட்பட பல்வேறு செயலிகள் மூலம் விநியோகம் செய்த குற்றத்திற்காக ஐந்து நபர்களை ஹைதராபாத் போலீஸ் கைது செய்தது.

கிட்டதட்ட 65 இணையதளங்களின் வழியாக சட்டவிரோதமாக திரைப்படங்களை இந்த கும்பல் வெளியிட்டு இதன்மூலம் சுமார் ரூ 20 கோடி வரை சம்பாதித்துள்ளனர். இந்த ஆப்களை தரவிரக்கும் பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட புகைப்படங்கள் , வங்கி கணக்கு விபரங்கள் உள்ளிட்ட தகவல்களை சேகரித்து அவற்றை பெரும் தொகைக்கு சைபர் குற்றவாளிகளுக்கு விற்பனை செய்துள்ள அதிர்ச்சிகரமான தகவல்களும் தெரிய வந்துள்ளன.
இந்நிலையில் இயக்குநர் ராஜமவுலி பைரசி தளங்கள் குறித்து பொதுமக்களுக்கு இயக்குநர் ராஜமவுலி எச்சரிக்கை விடுத்துள்ளார். புதுப்படங்களை இலவசமாக காண என பைரசி தளங்களில் மக்கள் டவுன்லோடு செய்கிறார்கள். ஆனால் இங்கு எதுவும் இலவசம் கிடையாது. உங்களது தனிப்பட்ட தரவுகளை திருடப்பட்ட அதன்மூலம் அவர்கள் பணம் சம்பாதிறார்கள். பல பைரசி தளங்கள் மக்களின் தரவுகளை சட்டவிரோதமாக சேகரிக்கின்றன. பைரசியால் திரைத்துறையை விட பொதுமக்களுக்குதான் பெரிய இழப்பு மக்கள் கவனமாக இருங்கள் என்றுள்ளார்.

