Touring Talkies
100% Cinema

Tuesday, November 18, 2025

Touring Talkies

விஷால் இயக்கி நடிக்கும் ‘மகுடம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விஷால் இயக்கி, நடிக்கும் படம் ‘மகுடம்’. துஷாரா விஜயன் நாயகியாக நடித்துள்ளார். இந்த படம் குறித்து படக்குழுவினர் வெளியிட்டுள்ள பதிவில், 17 நாட்கள் இடைவிடாத கிளைமாக்ஸ் படப்பிடிப்புடன் திரைப்படம் பிரம்மாண்டமாக நிறைவடைந்துள்ளது. கடந்த 17 நாட்கள் தொடர்ந்து மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை 12 மணி நேரம் நடைபெற்ற அதிரடி நிறைந்த கிளைமாக்ஸ் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்துள்ளது.

சண்டை காட்சிகளுக்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பில் நடிகர், நடிகைகள், நூற்றுக்கணக்கான ஸ்டண்ட் மற்றும் நடன கலைஞர்கள், கணினி கிராபிக்ஸ் நிபுணர்கள், மற்றும் பல தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டனர். மிக நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட இந்த கிளைமாக்ஸ் காட்சி, காட்சியமைப்பு, உணர்ச்சி, அதிரடி ஆகிய அனைத்தையும் இணைத்து ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படம், நடிகர் விஷாலின் முதல் இயக்குநர் முயற்சி என்பதால் மிகவும் சிறப்பானது. நடிப்பு மற்றும் இயக்கம் இரண்டையும் அவர் இணைத்து, புதிய அனுபவத்தை உருவாக்கியுள்ளார்.

பிரபல ஸ்டண்ட் இயக்குநர் திலீப் சுப்பராயன், நடன இயக்குநர் அசார் ஆகியோர் நிஜத்தன்மை மிகுந்த அதிரடி காட்சிகளை வடிவமைத்து படத்தின் தரத்தை உயர்த்தியுள்ளனர். படக்குழு தெரிவித்ததாவது:

“ஒவ்வொரு நாளும் கடின உழைப்பு, பொறுமை, ஆர்வம், உறுதி ஆகியவற்றின் கலவையாக இருந்தது. வீரமும் உணர்ச்சியும் முழுமையாக பிரதிபலிக்கும் படமாக இது இருக்கும்.” சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் உள்ளது. படம் 2026ல் வெளியாக உள்ளது.

- Advertisement -

Read more

Local News