இன்று கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு அன்பறிவு இயக்கத்தில் கமல் நடிக்கும் படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்திற்கு கமல் கதை எழுதியுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளனர். மேலும் ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார் என அறிவித்துள்ளனர். இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழி படங்களுக்கு பிஸியாக இசையமைத்து வருகிறார். குறிப்பாக லோகா சாப்டர் 1, அய்யப்பனும் கோசியும், நரிவேட்டா, சரிபொத்தா சனிவாரம், மாஃபியா சாப்டர் 1, போர் தொழில் போன்ற பிரபலமான படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தவிர்த்து சுனில் கேஎஸ் ஒளிப்பதிவு செய்ய, ஷீமர் படத்தொகுப்பு வேலையை கவனிக்கிறார். விரைவில் படப்பிடிப்பு துவங்குகிறது.


