நடிகை அனுஷ்கா கதாநாயகியாக நடித்த ‘காட்டி’ திரைப்படம் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதன் பின்னர், அவர் மலையாளத்தில் உருவாகி வரும் ‘கதனார்: தி வைல்ட் சோர்சரர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தில் அனுஷ்காவுடன் ஜெயசூர்யா மற்றும் பிரபுதேவா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை ரோஜின் தாமஸ் இயக்குகிறார்.
இன்று அனுஷ்காவின் பிறந்தநாளையொட்டி, இப்படக்குழு அவரின் சிறப்புப் போஸ்டரை வெளியிட்டுள்ளது. ‘கதனார்’ திரைப்படம் ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ்பெற்ற கிறிஸ்தவ பாதிரியார் கடமடத்து கதனார் அவர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட வரலாற்று கதை. அற்புத சக்திகளை பெற்றவராக அவர் பற்றிய கதைகள் பரவலாக சொல்லப்பட்டன. அந்த கதாபாத்திரத்தைக் கொண்டு உருவாகும் இந்த திரில்லர் படத்தில், அனுஷ்கா முக்கியமான வேடத்தில் நடிக்கிறார் என கூறப்படுகிறது.

