Touring Talkies
100% Cinema

Thursday, November 6, 2025

Touring Talkies

ஆரோமலே படத்திற்காக நடிகர் கிஷன் தாஸ் எடுத்த அந்த முடிவு… என்ன தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

முதலும் நீ முடிவும் நீ’, ‘சிங்’, ‘தருணம்’ போன்ற படங்களில் ஹீரோவாக நடித்தவர் கிஷன் தாஸ். இவர் தொலைக்காட்சி நடிகை பிருந்தா தாஸின் மகன். நடிகர் தியாகுவின் மகனான சாரங் தியாகு இயக்கியுள்ள படம் ‘ஆரோமலே’. இதில் டாக்டர் ராஜசேகரின் மகளும், ‘இது தாண்டா போலீஸ்’ படத்தின் ஹீரோயினுமான ஷிவாத்மிகா நாயகியாக நடித்துள்ளார். காதலை மையப்படுத்திய கதையம்சத்துடன் இப்படம் உருவாகியுள்ளது.

படப்பிடிப்பு காலத்தில் ஹீரோ கிஷன் தாஸ் திருமணம் செய்து கொண்டதாகவும், ஹனிமூன் செல்ல இருந்த போதிலும் படப்பிடிப்புக்காக தனது தேதிகளை மாற்றியதாகவும் கூறப்படுகிறது. மேலும், நடிகர் தியாகுவும் டி. ராஜேந்தரும் நெருங்கிய நண்பர்கள். அதுபோல தியாகுவின் மகன் சாரங்கும் சிம்புவும் நல்ல நண்பர்கள். அதனால் இப்படத்தின் காதல் சார்ந்த வாய்ஸ் ஓவர் பகுதிகளில் சிம்பு குரல் கொடுத்துள்ளார்.

இப்படத்தை டி. ராஜேந்தரும் உஷாவும் பார்த்து பாராட்டியுள்ளனர். உடல் நலக் குறைவு காரணமாக நடிகர் தியாகு இப்படத்தில் நடிக்கவில்லை. ‘டியூட்’ படத்திற்கு பின் நடிகர் ஹர்ஷத் கான் இப்படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்துள்ளார். இசை அமைப்பை சித்து மேற்கொண்டுள்ளார். பள்ளி மாணவன், கல்லூரி மாணவன், வேலைக்கு செல்பவர் என மூன்று தோற்றங்களில் ஹீரோ கிஷன் தாஸ் திரையில் தோன்றுகிறார். ஷிவாத்மிகா தவிர, மேகா ஆகாஷ் மற்றும் நர்மதா ஆகியோரும் சிறப்பு தோற்றங்களில் நடித்துள்ளனர்.

- Advertisement -

Read more

Local News