கே.பிரவீண் இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத், மானசா சவுத்ரி, செல்வராகவன் நடித்த ‘ஆர்யன்’ படம், கடந்த வாரம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தின் வெற்றியைப் படக்குழுவினர் சென்னையில் கொண்டாடினார்கள்.

இந்த விழாவில் கலந்துகொண்ட நடிகரும், படத்தின் தயாரிப்பாளருமான விஷ்ணு விஷாலிடம், ‘படத்தில் உங்களை விட செல்வராகவனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதே… அவரது டைரக்ஷனில் நடிக்க திட்டமா?’ என்று கேட்கப்பட்டது.
இதற்கு அவர் பதிலளிக்கையில், ‘‘கதைக்கு தேவைப்பட்டது என்பதால், என் கதாபாத்திரத்தை அவர் மீறினாலும் சரி என்று முடிவெடுத்தேன். வழக்கமாக படத்தின் முக்கிய காட்சிகளில் ஹீரோ தான் நிறைந்திருப்பார். அந்த ஹீரோயிசத்தை உடைக்கவே இந்த முயற்சி. எனக்கு கதை தான் முக்கியம். நான் தான் எல்லா காட்சிகளில் நிறைந்திருக்க வேண்டும் என்று ஒருபோதும் நினைத்தது இல்லை, நினைக்கவும் மாட்டேன். அதேவேளை செல்வராகவன் டைரக்ஷனில் நடிக்கவேண்டும் என்பது எல்லோரைப்போல எனக்கும் ஆசைதான்”, என்றார்.

