விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ஆர்யன் படத்தில் வில்லனாக நடித்துள்ளார் இயக்குனர் செல்வராகவன். சென்னையில் நடந்த சமீபத்திய விழாவில் பேசிய இயக்குனர் செல்வராகவன், தற்போது 7ஜி ரெயின்போ காலனி 2 இயக்கி வருகிறேன் 70% படப்பிடிப்பு நிறைவடைந்தது.

இப்படத்தின் முதல்பாகத்தில் இறந்த அனிதா கதாபாத்திரம் இந்த பாகத்தில் இருக்கிறதா இல்லையா என்பது தான் பெரிய சஸ்பென்ஸ். இதற்கு அடுத்தபடியாக புதுப்பேட்டை 2, ஆயிரத்தில் ஒருவன் பார்ட் கூட எடுக்க தயாராக உள்ளேன். அதற்கு சம்பந்தப்பட்ட நடிகர்கள் கால்ஷீட் கொடுக்க வேண்டும் என்றார்.
மேலும், இப்போதெல்லாம் பழைய படங்கள் கிளைமாக்ஸை ஏஐ தொழில்நுட்பம் மூலம் மாற்றி வெளியிடுகிறார்கள். ஹாலிவுட்டிலும் இது நடக்கிறது ஆனால் இப்படி மாற்றக்கூடாது. இயக்குனரின் படைப்பு உரிமையில் தலையிட்டு மாற்றக்கூடாது. ஒரு படத்தை அப்படியே வெளியிடுவது தான் சிறந்தது என்றுள்ளார்.

