‘விருபாக்ஷா’ திரைப்படத்தை இயக்கிய கார்த்திக் வர்மா தண்டு இயக்கத்தில், நடிகர் நாகசைதன்யா தனது 24வது படத்தில் நடித்து வருகிறார். இதில் நாயகியாக மீனாட்சி சவுத்ரி நடித்துவருகிறார்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் ஆகிய இரண்டு தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகின்றன.
இந்த படம் அறிவிக்கப்பட்ட சில மாதங்களாகவே இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மீனாட்சி சவுத்ரி நடித்துள்ள ‘தக்சா’ என்ற கதாபாத்திரத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அந்த போஸ்டரை பார்த்தபோது, அவர் தொல்லியல் ஆய்வாளர் வேடத்தில் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

