‘பல்டி’, ‘டியூட்’ ஆகிய படங்களுக்கு பிறகு ‘கருப்பு’, ‘பென்ஸ்’, ‘மார்சல்’ போன்ற படங்களுக்கு இசையமைத்து வருகிறார் இசையமைப்பாளர் சாய் அபயங்கர். தொடர்ந்து அல்லு அர்ஜுன் நடிப்பில் அட்லி இயக்கும் புதிய படத்திற்கும் அவர் இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில், இன்று சாய் அபயங்கரின் பிறந்த நாளான இன்று, அல்லு அர்ஜுன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அதில், “என் சகோதரர் எஸ்ஏகேவுக்கு இது மகிழ்ச்சியான நாள். வரவிருக்கும் ஆண்டுகளில் உங்களுக்கு வெற்றி மற்றும் பெருமை கிட்ட வாழ்த்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
இதன்மூலம், அல்லு அர்ஜுனின் 22வது படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைப்பது உறுதியாகியுள்ளது. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடித்து வந்த நிலையில், தற்போது நடிகை மிருணாள் தாக்கூரும் இதில் இணைந்து நடித்துவருகிறார்.

