தமிழில் ‘பூ’, ‘மரியான்’, ‘சென்னையில் ஒருநாள்’, ‘தங்கலான்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த பார்வதி திருவொத்து, மலையாள திரையுலகிலும் முன்னணி நடிகையாக திகழ்கிறார். சமூகம் குறித்து தன்னுடைய நேர்மையான கருத்துக்களை அடிக்கடி பகிர்வார்.

இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகை பார்வதி திருவொத்து“வாழ்க்கையில் எது வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். அதற்காக உண்மையை மறைத்து வாழ்வதில் எந்த பயனும் இல்லை. எனக்கு என்ன தோன்றுகிறதோ அதை மறைக்காமல் வெளிப்படையாகச் சொல்லிவிடுவேன். அதுதான் எனக்குப் பொருத்தமானது.
நல்லவளாக காட்டிக்கொள்ள நடிக்கிறதைவிட, உண்மையாக இருப்பதே மேலானது. அந்த போலி முகமூடி எனக்கு தேவையில்லை என கூறியுள்ளார்.

