ரஜினிகாந்தின் ‘கூலி’ படத்தில் வில்லனாக நடித்த நடிகர் நாகார்ஜூனா, தற்போது தெலுங்கு பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இதற்கிடையில், அவரது 100வது திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகளும் தொடங்கியுள்ளன. ஆர். கார்த்திக் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் இறுதியில் தொடங்க உள்ளது. நாகார்ஜூனா தயாரித்து நடிக்கும் அவரது இந்த நூறாவது படத்தில், அவருடன் மூன்று நடிகைகள் நடிக்க உள்ளனர்.

அவற்றில், ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் ஹிந்தி நடிகை தபு நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் தற்போது இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை சுஷ்மிதா பட்-ம் தற்போது ஒப்பந்தமாகியுள்ளார்.
இவர் தமிழில் விக்ரம் பிரபு நடித்த ‘லவ் மேரேஜ்’ படத்தில் ஜூன் மாதம் திரைக்கு வந்து, அதில் கதாநாயகியாக நடித்திருந்தார். இவரைத் தொடர்ந்து இந்த படத்தில் இன்னொரு நாயகியாக நடிக்க ஒரு பிரபல நடிகையுடன் தற்போது பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

