கே.ஆர். வினோத் இயக்கத்தில், ரெவ்ஜென் பிலிம் பேக்டரி சார்பில் லெனின் தயாரித்திருக்கும் படம் ரெட் லேபிள். இதில் கதாநாயகனாக லெனின், நாயகியாக அஸ்மின் நடித்துள்ளனர். மேலும், இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் மற்றும் முனிஷ்காந்த் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கோவையை மையமாகக் கொண்ட கல்லூரி பின்னணியில் நடக்கும் கொலை சம்பவங்களை மையமாகக் கொண்ட மர்மத் திரில்லர் கதை அமைப்பில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் கோவை நகரில் நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரெட் லேபிள் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகை சிம்ரன் வெளியிட்டுள்ளார். பொதுவாக சிம்ரன் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது அரிது. ஆனால் புதிய படக்குழுவினருக்கு ஊக்கம் அளிக்கும் நோக்கில், முதல் முறையாக சிம்ரன் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்தியுள்ளார்.

