கோவை கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள 111 ஏக்கர் பரப்பளவு மைதானத்தில் 3.8 கிலோ மீட்டர் நீள கார் பந்தய டிராக் உள்ளது. இந்த மைதானம் சர்வதேச தரத்தில் தயார் செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் கோவையில் சர்வதேச அளவிலான கார் பந்தயம், புகழ் பெற்ற பார்முலா 1 வகை கார் பந்தயங்களை நடத்த முடியும்.

இந்த நிலையில் நடிகரும், கார் பந்தய வீரருமான அஜித்குமார் கருமத்தம்பட்டியில் உள்ள சர்வதேச கார் பந்தய மைதானத்தை பார்வையிட்டார். பின்னர் பிரபல கார்பந்தய வீரர் நரேன் கார்த்திகேயனை சந்தித்தார். அங்கு அவர்கள் இருவரும் சிறிது நேரம் உரையாடினர்.
பின்னர் நடிகர் அஜித்குமார் அங்குள்ள கோ கார்ட்டிங் ரேஸ் காரை ஓட்டி பார்த்தார். நடிகர் அஜித்குமாரும், கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயனும் கலந்துரையாடும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

