‘பைசன்’ திரைப்படம் தன்னுடைய மனதிற்கு மிகவும் பிடித்ததாக இருந்ததாக பிரபல இயக்குனர் மணிரத்னம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “இப்போதுதான் ‘பைசன்’ படத்தை பார்த்தேன் மாரி. மிகுந்த விருப்பமுடன் ரசித்தேன். நீயே அந்த பைசன். உன் படைப்பை பார்த்து பெருமைப்படுகிறேன். இதேபோல் தொடர்ந்து செய். உன் குரல் மிகவும் முக்கியமானது,” என்று குறிப்பிட்டுள்ளார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் இணைந்து நடித்துள்ள ‘பைசன்’ திரைப்படம், கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
சமூகப் பிரச்சனைகளைக் கையாளும் தனித்துவமான கதை சொல்லும் முறை, ஆழமான உணர்வுகள், நிஜத்தை பிரதிபலிக்கும் காட்சிகள் ஆகியவற்றால் இப்படம் பாராட்டுகளை பெற்று வருகிறது.

