இயக்குனரும் நடிகருமான சசிகுமார் ‘அயோத்தி’ திரைப்படத்திற்குப் பிறகு ‘கருடன்’, ‘நந்தன்’, ‘டூரிஸ்ட் பேமிலி’ போன்ற வித்தியாசமான கதையம்சங்கள் கொண்ட படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது அவரது கைவசத்தில் ‘பிரீடம்’, ‘வதந்தி 2’ (வெப்சீரிஸ்), ‘எவிடென்ஸ்’ ஆகிய படங்கள் உள்ளன.

இந்த நிலையில் சசிகுமார் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இயக்குனர் செல்வராகவனின் உதவி இயக்குனர் இயக்கும் இப்படத்தில், சசிகுமார் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த புதிய படத்திற்கு ‘அதிகாரி’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

