தொலைக்காட்சியில் ‘நாளைய இயக்குனர்’ நிகழ்ச்சியை இயக்கி வந்த சிவநேசன், தற்போது சினிமா இயக்குனராக அறிமுகமாகிறார். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்தப் படத்தை, பரத் நடித்த ‘காளிதாஸ்’ படத்தை தயாரித்த Incredible Production நிறுவனம் தயாரிக்கிறது. கிஷோர், சார்லி, சாருகேஷ், வினோத் கிஷன் மற்றும் ஷாலி நிவேகாஸ் உள்ளிட்ட பலரும் இதில் நடிக்கின்றனர்.

படம் குறித்து இயக்குநர் சிவநேசன் கூறுகையில், “இந்த படத்தில் திரைக்கதையே நாயகன். ரசிகர்களை கடைசி வரை சஸ்பென்ஸில் வைத்திருக்கும் கதை இது. எதிர்பாராத திருப்பங்களை மையமாகக் கொண்ட சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படம் இது.
ஆரம்பம் முதல் முடிவு வரை பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சுவாரஸ்யமான கதை, திறமையான நடிகர்கள், திறம்பட செயல்படும் தொழில்நுட்பக் குழு என்ற கூட்டணியில் சேர்ந்து உருவாகும் இந்த படம், தமிழ்த் திரைத்துறையில் புதிய அணுகுமுறையாக அமையும், என்றார்.

