பிரபல பான் இந்திய நடிகரான பிரபாஸ், ‘சீதா ராமம்’ படத்தின் இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் நடிக்கும் புதிய படம் ‘பௌஜி’. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், பிரபாஸின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று வெளியிடப்பட்டது.

இந்தப் படத்தின் சுமார் 60 சதவீத படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு திட்டமிட்டுள்ளது. இதில் சமூக ஊடகங்களில் பிரபலமான இமான்வி கதாநாயகியாக நடிக்கிறார்.
இதற்கிடையில், சமீபத்தில் இப்படம் குறித்து மேலும் ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. கன்னடத் திரைப்பட நடிகையான சைத்ரா இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு அவர் ‘சப்த சாகரதாச்சே எல்லோ’, தமிழில் ‘3 பிஎச்கே’ போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ஜெயபிரதா, மிதுன் சக்ரவர்த்தி, அனுபம் கெர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் இசையை விஷால் சந்திரசேகர் அமைத்துள்ளார்.

