மலையாளத் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக விளங்கி வரும் நடிகர் மம்முட்டி. சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியாகிய ‘பசூக்கா’ திரைப்படம் டீனா டென்னிஸ் இயக்கத்தில் உருவாகி சிறந்த வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது மம்முட்டி புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் மம்முட்டியுடன் ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் வில்லனாக நடித்த விநாயகனும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்தப் படத்திற்கு ‘களம்காவல்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ‘குரூப்’, ‘ஓஷானா’ போன்ற படங்களுக்கு கதை எழுதிய ஜிதின் கே. ஜோஷ் இப்படத்தின் இயக்குநராக பணியாற்றுகிறார். இந்த படம் குற்றப்புனைவு (கிரைம் திரில்லர்) வகையில் உருவாகி வருகிறது.

‘களம்காவல்’ திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டு சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இதில் மம்முட்டி மற்றும் விநாயகன் இணைந்து நடித்த காட்சிகள் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளன. மேலும், ‘களம்காவல்’ திரைப்படத்திற்கு தணிக்கை வாரியத்தால் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ‘களம்காவல்’ திரைப்படம் வரும் நவம்பர் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

