தனுஷ் நடிப்பில் கடந்த 2023ல் தெலுங்கு மற்றும் தமிழ் இரு மொழிகளில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘வாத்தி’. இதற்குப்பிறகு வெங்கி அட்லூரி, சூர்யா நடிக்கும் தனது 46வது படத்தை இயக்குகிறார். சமீபத்திய பேட்டியில், ‘வாத்தி’ படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் தனுஷ் அல்ல என்பதை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வெங்கி அட்லூரி பேசுகையில், “வாத்தி கதாபாத்திரத்தை முதலில் ரவி தேஜா நடிப்பதாக எழுதினேன். அவர் கதையைப் பிடித்தார், ஆனால் சில மாதங்கள் கால்சீட் இல்லை. அதே சமயம் ‘எனக்காக காத்திருங்கள்’ என்றும் ‘வேறு வாய்ப்பு வந்தால் முயற்சி செய்யுங்கள்’ என்றும் கூறினார். அதன் பிறகு தான் தனுஷ் நடிக்க ஒப்பந்தமானார்.
இந்த விஷயத்தை ரவி தேஜாவிடம் சொல்லும்போது, தனுஷ் மிகவும் சிறந்த நடிகர் கவனமாக படத்தை பண்ணுங்கள் என்று கூறியதாக தெரிவித்துள்ளார்

