நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் கூட்டணியில் உருவான திரைப்படம் ‘ஜெயிலர்’. இந்தப் படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. படத்தின் முதல் பாகம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தற்பொழுது ‘ஜெயிலர் 2’ திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் நடிகர் ஃபகத் ஃபாசில், மோகன்லால், தெலுங்கு நடிகர் பாலையா மற்றும் எஸ்.ஜே சூர்யா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
ஜெயிலர் 2-க்கும் அனிருத்தே இசையமைக்கிறார். ஒளிப்பதிவு பணிகளை விஜய் கார்த்திக் கண்ணன் மேற்கொண்டு வருகிறார். இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ‘ஜெயிலர் 2’ படக்குழு அதன் BTS (பின்புல) வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.