தமிழில் ‘லவ் டுடே’ மற்றும் ‘டிராகன்’ போன்ற தொடர்ச்சியான வெற்றி படங்களுக்குப் பிறகு, பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள திரைப்படம்.டியூட். கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் உருவாகிய இந்த படத்தில் மலையாள நடிகை மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ளார்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்த இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று வருகிறது.தமிழ் மற்றும் தெலுங்கில் நல்ல வசூலை குவித்து வருகிறது. இப்படி மமிதா பைஜுவுடன் நேஹா ஷெட்டி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இதற்கிடையில், இப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் நடிகை நேஹா ஷெட்டி. தற்போது நேஹா ஷெட்டியும் டாக் ஆஃப் தி டவுனாக மாறியுள்ளார்.