பாலிவுட் டாப் 3 நட்சத்திரங்களான ஷாருக்கான், சல்மான் கான், அமீர்கான் மூவரும் சவுதி அரேபியாவின் ரியாத்தில் நடந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். அப்போது சல்மான் கான் பேசுகையில், நாங்கள் ஒருபோதும் ஸ்டார்கள் என்று நினைத்ததில்லை என்றார். ஷாருக்கான் பேசியபோது, அமீர் மிகச் சிறந்த நடிகர். சல்மான் இதயத்திலிருந்து வேலை செய்கிறார். நான் இரண்டையும் இணைக்க முயல்கிறேன் என்றார். அமீர்கான், சரியான கதை அமைந்தால் மூவரும் ஒன்றாக படத்தில் நடிப்போம் நாங்கள் தயார் என்றார்.
