Touring Talkies
100% Cinema

Saturday, October 18, 2025

Touring Talkies

நேச்சுரல் ஸ்டார் நானியுடன் இணைந்து நடிக்க ஆசை… நடிகை ருக்மிணி வசந்த்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை ருக்மிணி வசந்த் தற்போது பலரது இதயங்களை வென்று இந்திய அளவில் பிரபலமாகி இருக்கிறார். சினிமாவில் நுழைந்த குறுகிய காலத்திலேயே அனைவரையும் கவர்ந்துள்ளார். கன்னடத்தில் பல படங்களில் நடித்துள்ள இவர், ரக்‌ஷித் ஷெட்டியுடன் இணைந்து சப்த சாகரலு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார்.

இந்தப் படத்திற்குப் பிறகு, நிகில் சித்தார்த்துக்கு ஜோடியாக ‘அட்டூ ஆபூ ஈப்பூ ஈப்பூ’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். தமிழில் விஜய் சேதுபதியுடன் ஏஸ் படத்திலும், சிவகார்த்திகேயனுடன் மதராஸி படத்திலும் நடித்திருந்து ரசிகர்களை கவர்ந்திருந்தார்.

சமீபத்தில் காந்தாரா 2 படத்தில் நடித்த அவரது நடிப்பு மிகப்பெரிய பாராட்டை அவருக்கு பெற்றுத்தந்தது. தற்போது அவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில், முன்னதாக ஒரு நேர்காணலில் பங்கேற்ற ருக்மிணி வசந்த், தெலுங்கில் தனக்குப் பிடித்த ஹீரோவைப் பற்றி கூறினார். தெலுங்கில் உங்களுக்கு எந்த ஹீரோ பிடிக்கும்? யாருடன் நடிக்க விரும்புகிறீர்கள் என்று கேட்டபோது.. நேச்சுரல் ஸ்டார் நானி தான் தனக்குப் பிடித்த ஹீரோ என்று கூறினார். அவருடன் படம் நடிக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News