ரிஷப் ஷெட்டி, ருக்மினி வசந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘காந்தாரா சாப்டர்-1’ சர்வதேச அளவில் வெளியான இந்த படம் திரைக்கு வந்து ரூ.1000 கோடி வசூலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. படத்தின் வெற்றி ரிஷப்ஷெட்டியையும், கதாநாயகியான ருக்மிணி வசந்த்தையும் உலக அளவில் பிரபலமாக்கி இருக்கிறது.இது மட்டுமின்றி சமூக வலைதள பக்கங்களிலும் ரிஷப்ஷெட்டி, ருக்மிணி வசந்த் பெயர்கள் டிரெண்டிங்காகி வருகிறது. மேலும் ஐ.எம்.டி.பி. வெளியிட்டுள்ள டிரெண்டிங் பட்டியலில் முதல் 2 இடங்களை ரிஷப்ஷெட்டியும், ருக்மிணி வசந்தும் பெற்றுள்ளனர். ரிஷப் முதல் இடத்தையும் 2-ம் இடத்தை ருக்மிணி வசந்தும், 3-வது இடத்தில் மோனாசிங், 4-வது இடத்தில் ஹிருத்திக் ரோஷன் பெயரும் இடம் பெற்று உள்ளன.
