இயக்குனர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் நடிகர் சூரி மண்டாடி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். எல்ரட் குமாரின் ஆர்.எஸ். இன்போ நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இதில் நடிகை மகிமா நம்பியார் கதாநாயகியாகவும், நடிகர் சுஹால் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கான இசையை ஜி.வி. பிரகாஷ் குமார் அமைத்துள்ளார்.
மண்டாடி படத்தின் படப்பிடிப்பு ராமநாதபுரம் மாவட்டத்தின் தொண்டி கடற்பகுதியில் சமீபத்தில் நடைபெற்றது. இந்நிலையில் இப்படத்தின் இசை தொடர்பாக நடிகர் சூரி தனது எக்ஸ் தளத்தில் ஒரு அப்டேட்-ஐ கொடுத்துள்ளார்.
அதில், மண்டாடி படம் எங்கள் இசையமைப்பாளரின் மந்திர இசையால் இன்னும் பிரம்மாண்டமாக ஜொலிக்கும்…இந்த தீபாவளி, ஜி.வி. பிரகாஷ் மற்றும் எங்கள் இயக்குநர் மதிமாறனுடன் நடைபெற்ற உரையாடலுடன் உற்சாகமாக தொடங்கியது. 100க்கும் மேற்பட்ட படங்களில் சாதனை படைத்ததற்கு வாழ்த்துகள்! மேலும் பல வெற்றிகள் தொடர வாழ்த்துகிறோம்… என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், மண்டாடி படத்தின் இயக்குநர் மதிமாறன் மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷுடன் இணைந்து தான் எடுத்த புகைப்படத்தை சூரி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.