தமிழில் மான் கராத்தே, கெத்து போன்ற படங்களை இயக்கிய கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் அருண் விஜய், சித்தி இட்னானி, தன்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ரெட்ட தல. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, தற்போது கடைசிக் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இயக்குனர் கிரிஷ் திருக்குமரன் அளித்த பேட்டியில், ரெட்ட தல படத்தின் கதைக்கரு குறித்து கூறியதாவது: “தவறு செய்யும் முன் ‘யாரும் பார்க்கவில்லை’ என்று நினைக்கக் கூடாது. யாரோ ஒருவர் எப்போதும் நம்மைப் பார்த்துக்கொண்டே இருப்பார்கள். அது கடவுளாக இருக்கலாம், காற்றாக இருக்கலாம், இயற்கையாக இருக்கலாம்.
நான் ரெட்ட தல படத்தின் கதைச் சிந்தனையை ஷேக்ஸ்பியரிடமிருந்து பெற்றேன். ஒரு இளைஞன் தன் ஆசைப்பட்ட பெண்ணுக்காக எந்த எல்லைக்கும் செல்ல நினைக்கிறான். ஆனால் கடைசியில் அந்தப் பெண் அதற்குத் தகுதியானவளா என்று அவன் யோசிக்கிறான். அந்த யோசனை அவனுக்குள் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அந்த உள்மாற்றம்தான் ரெட்ட தல படத்தின் மையக் கரு,” என்று இயக்குனர் விளக்கம் அளித்தார்.