ட்விட்டரில் ரசிகர் ஒருவர் தனது அம்மாவின் மருத்துவ சிகிச்சைக்கு 10 ஆயிரம் ரூபாய் பணம் வேண்டும் என கேட்டிருக்கிறார். அந்த பதிவை பார்த்த ஜீ.வி.பிரகாஷ் உடனடியாக அவருக்கு 10 ஆயிரம் ரூபாயை அனுப்பி வைத்திருக்கிறார். இது முதல்முறை அல்ல இதுபோன்ற ரசிகர்கள் அவ்வப்போது உதவி தேவை என கேட்கும்போது எல்லாம் உடனடியாக உதவி செய்துள்ளார் ஜ.வி பிரகாஷ். இந்த செயல் ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
