லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் ‘கூலி’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதைத் தொடர்ந்து ரஜினிகாந்த், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாக உள்ளது.

சமீபத்தில் இமயமலை சென்று திரும்பியுள்ள ரஜினி, கமலுடன் இணைந்து நடிக்கும் படத்தின் கதை மற்றும் இயக்குநர் இன்னும் முடிவாகாததால் இந்த படத்துக்கு முன்பாக இருக்கும் இடைவெளியில் வேறு ஒரு படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார். அதற்காக கதைகள் கேட்டு வருகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் ரஜினியின் அடுத்த படத்தை இயக்குநர் சுந்தர்.சி இயக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் உலாவருகின்றன. ‘அருணாச்சலம்’ படத்துக்குப் பிறகு ரஜினி – சுந்தர்.சி கூட்டணி இணைய இருப்பதாகவும், தயாரிப்பாளர் மற்றும் படக்குழு குறித்த விவரங்கள் விரைவில் தெரியவரும் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்து எந்தவொரு அதிகாரபூர்வ தகவல்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.