ஆக்சன் ஹீரோவாக சரியாக நடித்ததாக டீசல் படத்தின் டிரெய்லரைப் பார்த்து, நடிகர் சிம்பு பாராட்டியதைப் பார்த்து நம்பிக்கை பெற்றதாக நடிகர் ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள டீசல் திரைப்படம் வரவிருக்கும் 17-ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது.
அந்த சந்திப்பில், அனைவரும் சொல்வதுபோல் கொஞ்சம் அதிகமாக ஆக்சன் ஹீரோவாக நடித்து விட்டேனா என சந்தேகம் இருந்ததாகவும், பிறகு சிம்பு பாராட்டியதால் நம்பிக்கை கிடைத்ததாகவும் ஹரிஷ் கல்யாண் தெரிவித்தார். “பார்க்கிங்” மற்றும் “லப்பர் பந்து” படங்களின் மூலம் வெற்றிகளைப் பெற்ற ஹரிஷ், இந்தப் படத்தின் மூலம் மூன்றாவது வெற்றியைப் பெற ஆவலுடன் காத்திருக்கிறார்.