இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில் சர்வதேச அளவில் ஒரு கூட்டணி அமைக்கப்போவதாக தெரிவித்திருந்தார். பலரும் அது குறித்து ஆர்வத்துடன் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் இங்கிலாந்து பிரபல பாடகர் எட் ஷீரன், ஹனுமான்கைண்ட், தீ, சந்தோஷ் நாராயணன் ஆகியோர் இணைய உள்ளதாகவும், இதனை தானே தயாரித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இது ஒரு ஆல்பம் பாடலாக இருக்கும் என்று கருதப்படும் நிலையில் இந்த தகவல் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
