Touring Talkies
100% Cinema

Tuesday, October 14, 2025

Touring Talkies

‘டியூட்’ படத்திற்காக தூங்காமல் வசனங்களை பேசி பயிற்சி செய்து நடித்தேன் – நடிகை மமிதா பைஜூ !

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மலையாளத்தில் ‘பிரேமலு’ படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் பிரபலமானவர் மமிதா பைஜு. அதன்பிறகு தமிழில் ‘ரெபல்’ என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது ஜனநாயகன், டியூட், சூர்யா 46வது படம் என பல தமிழ் படங்களில் நடித்து வருகிறார். 

தற்போது பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக டியூட் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை கீர்த்திஸ்வரன் இயக்கியுள்ளார். சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இப்படம் தீபாவளிக்கு வெளியாகிறது.

இந்நிலையில் டியூட் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் மமிதா பைஜூ பேசுகையில்,

எனக்கு பல எமோஷனல் காட்சிகள் இப்படத்தில் உள்ளன. இவற்றில் சிறப்பாக நடிக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு காட்சிகளின் வசனத்தை, சில நாட்கள் இரவு தூங்காமல் மனப்பாடம் செய்து பேசி பயிற்சி எடுத்து நடித்தேன். அதனால் இந்த படத்தில் எனது கதாபாத்திரம் உங்களை நிச்சயம் கவரும் என தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News