நடிகை மாளவிகா மனோஜ் 2023-ல் வெளியான ‘ஜோ’ படத்தின் மூலம் பிரபலமானார். சமீபத்தில், அவர் ‘ஓ பாமா அய்யோ ராமா’ மூலம் தெலுங்கில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும், ரியோ ராஜ் உடன் நடித்த ‘ஆண் பாவம் பொல்லாதது’ படம் வரும் 31-ம் தேதி வெளியாக உள்ளது.

சமீபத்திய நேர்காணலில் மாளவிகா கூறியதாவது, தனது அம்மா அனுப்பிய புகைப்படத்தால் தான் நடிகையாக ஆனதாக கூறியுள்ளார், என் முதல் படம் பிரகாஷ் பரக்கத்தே என்னுடைய வாழ்க்கையை மாற்றிவிட்டது.
நான் 10ம் வகுப்பில் படிக்கும்போது, என் அம்மா அந்த படத்தின் ஆடிஷனுக்கு என் போட்டோ அனுப்பி இருந்தார். அதில் நான் தேர்வு ஆகும் வரை எனக்கு தெரியவில்லை. அப்படி தான் என் திரைப்பயணம் தொடங்கியது என்று கூறியுள்ளார்.