‘பைசன்’ படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார் அனுபமா பரமேஸ்வரன். கதைப்படி, அவர் திருநெல்வேலியைச் சேர்ந்த ராணி என்ற கிராமத்து பெண்ணாக நடித்துள்ளார். அந்த அனுபவம் பற்றி பேசுகையில், ‘‘பரியேறும் பெருமால்’ படத்தில் நான் நடித்திருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை.

எனக்கு மட்டுமல்ல, என் அப்பாவுக்கும் மிகவும் பிடித்த படமாக அது இருந்தது. மாரி செல்வராஜ் இயக்கும் படங்களின் டிரைலர், டீசர் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளை ஆர்வமாகக் காண்கிறேன். இப்படத்திற்காக அழைப்பு வந்தபோது மறுக்காமல் ஒத்துக் கொண்டேன்.
‘பிரேமம்’ படத்தில் நடித்தபோது எனக்கு ஒரு மனநிறைவு கிடைத்தது, நிறைய கற்றுக் கொண்டேன். அந்த அனுபவம் ‘பைசன்’ படத்திலும் கிடைத்தது. திருநெல்வேலியில் வயலில் இறங்கி நாட்டு நடுவது, செங்கல் சூளையில் வேலை செய்வது என பல புதிய அனுபவங்கள் கிடைத்தன. மக்களுடன் பழகியதும் மகிழ்ச்சி. ஹீரோ அக்காவாக நடித்த ரஜிஷா விஜயனும் நானும் நெருங்கிய தோழிகள் ஆகிவிட்டோம். மறக்க முடியாத அனுபவங்களை ‘பைசன்’ தந்தது என அவர் கூறினார்.