நடிகை சாய் பிரியா சமீபத்தில் அளித்த பேட்டியில், தாய் மொழி என்பதால் தமிழில் எந்த கேரக்டர் என்றாலும் நடித்து விடுவேன். மலையாளம், தெலுங்கு படங்களை பொருத்தவரையில் அந்த மொழியில் பேசி நடிக்க வேண்டும் என்பதால் ஒன்றுக்கு இரண்டு முறை பேசி பார்த்த பிறகு தான் ஷூட்டிங் செல்வேன். மலையாளம், தெலுங்கு நன்றாக பேசக்கற்று கொண்டேன்.மலையாளத்தில் ஒரிரு படங்களில் நடித்திருந்தாலும் கூட அங்கு எனக்கான இடம் உள்ளது. தமிழ் படங்களில் அந்தளவுக்கு வரவேற்பு வரும் காலங்களில் அமையும் என எதிர்பார்க்கிறேன் என்றார்.
